காஞ்சீபுரத்தில் கிடைத்த அதிசயம்! புராண காலத்தில் ராமர் பயன்படுத்தியதோ?
காஞ்சிபுரத்தில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் குளத்தில் தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் ஒன்றை எடுத்து அதை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார். நாம் பழங்காலத்தில் ராமாயணத்தில் ராவணனிடம் இருந்து சீதையை மீட்பதற்காகவும், ராமர் இலங்கைக்கு செல்லவும், ராமநாதபுரம் சேதுக் கரையில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முடிவு செய்தார்.
அப்போது ராமர், வானர பரிவாரங்களுடன் சென்று அந்த பாலத்தை கட்டியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. தற்போது கோவில் குளத்தில் மிதக்கும் தன்மை கொண்ட அதிசய கல் ஒன்றை காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் எடுத்துள்ளார். இது குறித்து அதை எடுத்த செல்வராஜ் கூறும் போது எனது வீட்டுக்கு அருகில் உள்ள இந்த கோவிலில் குளத்தில் தண்ணீரில் மிதக்கும் கல் ஒன்றைக் கண்டேன்.
எனவே அதை எடுத்து வந்து எனது வீட்டு தண்ணீர் தொட்டியில் போட்டு பார்த்தேன். அது மூழ்காமல் மிதந்தது. இந்த தகவல் அறிந்து அருகில் இருந்த பொதுமக்கள் பலரும் வந்து ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். அதன் பின்னர் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து விட்டேன் என்றார். மேலும் இது குறித்து அருங்காட்சியக காப்பாளர் உமாசங்கர் கூறும்போது, இந்த கல் ஒரு பவளப் பாறை வகையைச் சேர்ந்தது. இது கடலில் மட்டுமே காணப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதிகளில் இந்த கற்கள் அதிகமாக காணப்படுகின்றன. மிகவும் அரிதாக காணப்படும் இவ்வகை பவளப்பாறைகளை யாராவது கொண்டு வந்து காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் குளத்தில் போட்டிருக்கலாம். எனவே இது தண்ணீரில் மிதக்கிறது என்று ஆச்சரியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.