அமெரிக்காவில் நடந்த அதிசயம்! நான்கு ஆண்டுகளாக அப்படியே இருந்த கன்னியாஸ்திரியின் உடல்!!

0
315
#image_title
அமெரிக்காவில் நடந்த அதிசயம்! நான்கு ஆண்டுகளாக அப்படியே இருந்த கன்னியாஸ்திரியின் உடல்!
அமெரிக்காவில் மிசோரி என்ற சிறிய நகரத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த கன்னியாஸ்திரி ஒருரின் உடல் இன்னும் எதுவும் ஆகாமல் அப்படியே சவப்பெட்டிக்குள் இருந்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டில் மிசோரி என்ற சிறி நகரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்ஸாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019ம் ஆண்டு 95வது வயதில் உயிரிழந்தார். அவரது உடல் மரச்சவப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்வதற்காக சில நாட்களுக்கு முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது. சவப்பெட்டியை திறந்து பார்த்த மற்ற கன்னியாஸ்திரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால் சவப்பெட்டியில் இருந்த வில்ஹல்மினா லான்ஸாஸ்டர் அவர்களின் உடல் அழுகாமல் அப்படியே இருந்தது.
கன்னியாஸ்திரி வில்ஹல்மினா அவர்களின் உடல் புதைக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் உடல் அழுகாமல் தலை முடி, மூக்கு, உதடு, முகம், கண்கள் எந்த வித சேதமும் இல்லாமல் முகம் சிரித்தபடி இருந்தது.
பொதுவாக ஒருவர் இறந்தால் அவரது உடல் புதைக்கப்பட்டு சில மாதங்களிலேயே எலும்புக்கூடாக மாறி விடும். ஆனால் கன்னியாஸ்திரி வில்ஹல்மினா அவர்களின் உடல் அழுகாமல் இருந்ததால் இந்த செய்தி வேகமாக பரவியது.
இந்த செய்தி வேகமாக பரவி மிசோரி பகுதி மக்களும் அங்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகளும் அங்கு வந்து கன்னியாஸ்திரி வில்ஹல்மினா அவர்களின் உடலை அதிசியத்துடன் பார்த்தனர்.  மேலும் அந்த மக்கள் கன்னியாஸ்திரியின் பாதங்களை தொட்டு வணங்கினர். இதை மிசோரியின் அதிசயம் என்று மக்கள் தெரிவித்தனர்.
கன்னியாஸ்திரி வில்ஹல்மினா அவர்களின் உடலின் அருகே அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் “தயவு செய்து சகோதரியின் உடலையும் அவரது பாதங்களையும் தொடும் பொழுது மென்மையாக இருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous articleஇரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விபத்து!! 8 ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்!!
Next articleஅடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு!!