அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு!!

அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு!
மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களை கைப்பற்றி வெற்றி பெறுவோம் என்று இராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இதைப் போல இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றது போல இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் 150 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என்று இராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், காங்கிரஸ் பொறுப்பாளர் பி.அகர்வால் அவர்களுடன் ராகுல் காந்தி அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி அவர்கள் “நாங்கள் நீண்ட நேரம் விவாதம் செய்தோம். கர்நாடகத்தில் எங்களுக்கு 135 இடங்கள் கிடைக்கும் என மதிப்பீடு செய்தோம். அதே போல மத்தியப் பிரதேசத்தில் 150 இடங்களை கைப்பற்றுவோம். கர்நாடகத்தில் நாங்கள் என்ன செய்தோமோ அதையே மத்தியப் பிரதேசத்தில் செய்யப் போகிறோம்” என்று கூறினார்.