அதிசயம் நிறைந்த பழமை வாய்ந்த மரப்பாலம் திடீர் எரிந்து சாம்பல் !..
நிபுணர் சூ யிட்டாவோ வெளியிட்ட தகவல் !..
சீனாவின் கிழக்கே அமைத்துள்ள புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங் வம்சம் ஆட்சி செய்து வந்தார்கள்.இவர்கள் ஆட்சி செய்த 960-1127 காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று வடிவமைக்கப்பட்டது.
இந்த பரப்பலமானது சுமார் 98.3 மீட்டர்கள் நீளம் கொண்டது.வரலாற்று சிறப்புமிக்க இந்த மரப்பாலம் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.இதை பற்றி தீயணைப்பு துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த தகவலை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சில மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 10 மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முதல் 20 நிமிடத்தில் தீயில் எரிந்ததில் மரப்பாலம் கீழே ஒவ்வொன்றாக விழ தொடங்கியுள்ளது. நீண்ட வளைவுகளை கொண்ட இந்த பாலம் இயற்கை பேரிடரில் எரிந்திருக்காது என நிபுணர்கள் தெரிவித்தார்கள்.
இதுபற்றி குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தீ விபத்து மனிதர்களின் தொடர்பினால் ஏற்பட்டிருக்க வேண்டும். நீரின் மேல் அமைந்த அந்த பாலம் தொடர்ச்சியாக தீப்பிடித்து எரிந்திருக்கிறது என்பது மிக அரிது.
10 மணிநேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முதல் 20 நிமிடத்திலேயே மரப்பாலம் கிடு கிடுவென எரிந்து விழுந்துள்ளது என தெரிய வந்துள்ளது.வனான் பாலம் என பெயரிடப்பட்ட இந்த பாலம் பிரபஞ்சத்தின் அமைதிக்கான பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக கற்களால் பாலங்கள் அமைக்கப்படும். கலாசார மதிப்பு கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த, பழமையான, மரக்கட்டமைப்பில் உள்ளார்ந்த அறிவு மற்றும் புத்திச்சாலித்தனத்துடன், தொழில்நுட்ப அறிவுடன் வடிவமைத்து இருப்பதுடன், வளைவுகளுடன் கூடிய இந்த அளவு நீளத்துடன் மரப்பாலம் ஒன்றை அமைப்பது என்பது மிக கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் மீது அமைந்திருக்கும் கலை நுட்பம் வாய்ந்த மரத்தில் உருவான சீனர்களின் அறிவை நிரூபிக்கும் வகையிலான கட்டமைப்பு ஒன்றை நாம் இழந்திருக்கிறோம் என்று பெகிங் பல்கலை கழகத்தின் பழமையான கட்டமைப்பின் நிபுணர் சூ யிட்டாவோ தெரிவித்து உள்ளார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வந்தது.