தினமும் 6 மணி நேரம் மட்டுமே காட்சி கொடுக்கும் அதிசய சிவன் கோவில் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ளது.
குஜராத் மாநிலத்தில் கோலியாக் எனும் பகுதியில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
நிஷ்களங்கேஷ்வரர் என்ற பெயரில் இந்த சிவன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலானது கட்டப்பட்டுள்ளது.இந்த கோவில் கடற்கரையில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.இந்த கோவிலின் அதிசயம் என்னவென்றால் இரவு 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில் கடலுக்கு அடியில் மூழ்கி காணப்படும்.மற்ற நேரங்களில் கடல் உள்வாங்கி கோவிலுக்கு செல்லும் பாதையை அமைத்து கொடுக்கும்.
இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பகள் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் பெற்று பின்னர் சென்று விடுவார்கள்.8 மணிக்கு பிறகு இந்த கோவிலை கடல் நீர் சூழ்ந்து கொள்வதால் பக்தர்கள் 8 மணிக்குள் திரும்பி விடுகிறார்கள்.
இந்த கோவிலானது பாண்டவர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.மேலும் பாண்டவர்கள் தங்கள் சகோதரர்களான கௌரவர்களை கொன்றதற்கான சாபத்தை தீர்த்துக்கொள்வதற்கு இந்த கோவிலை உருவாக்கி உள்ளதாக வரலாறு கூறுகிறது.கடலுக்குள் 5 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டு அதனைச்சுற்றி கோவில் கட்டப்பட்டுள்ளது.
கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கோவிலுக்கு செல்வது அவ்வளவு எளிதில்லை என்றாலும் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் இன்றும் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.