இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

Photo of author

By Parthipan K

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

Parthipan K

The misery of a stillborn baby lying in the toilet of the hospital! A video that goes viral on the Internet!

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் பீர்.இவருடைய மனைவி ஷிபானா.இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.அதனையடுத்து அவருடைய உறவினர்கள் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.நேற்று இரவு ஷிபானாவிற்கு பிரசவம் நடந்துள்ளது.

ஆனால் செவிலியர்கள் பிறந்த குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்.மேலும் குழந்தையை குறித்து எந்த தகவலும் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.செவிலியர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். அதனையடுத்து செவிலியர்கள் அங்கிருந்து சென்றதும் உறவினர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தனர்.அப்போது அந்த அறையில் குழந்தை இல்லாததால்.அந்த அறை முழுவதும் தேடியுள்ளனர்.அப்போது அந்த அறையின் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.

அங்கு குழந்தை இறந்த நிலையில் துணிகளால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்து பிறந்துள்ளது.அதனை மறைக்க செவிலியர்கள் குழந்தையின் சடலத்தை மருத்துவமனையின் கழிவறையில் மறைத்து வைத்துள்ளனர் என குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தற்போது இறந்து பிறந்த குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் துணிகளால் சுற்றி வைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.இந்த சம்பவம் குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.