பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்! 

0
297
#image_title

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்! 

நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளின் போது ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி வெளியானது.  தேர்வு முடிவிற்கு பின்பு மதிப்பெண் குறைவாக வாங்கியோர் மற்றும் தேர்ச்சி பெறாதோர் போன்றவர்கள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனால்  பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், விண்ணப்பித்தனர். இதன் மூலம் விடைத்தாள்களை பெற்ற மாணவர்கள் மூலமாக விடைத்தாள்கள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 

அந்த மதிப்பீட்டுத் தாள்களில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்களை விட அதிகமான மதிப்பெண்கள் வழங்கி இருப்பது தெரியவந்தது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 5 முதல் 7 மதிப்பெண்கள் வரை கூடுதலாக வழங்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை உண்டாக்கியது.

மாணவர்களுக்கு அதிகமான மதிப்பெண்கள் வழங்கியதாக ஏற்பட்ட குற்றச்சாட்டு கல்வித்துறையில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிளஸ் டூ தேர்வுகளின் மதிப்பெண்களை பொறுத்தவரை ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிகவும் முக்கியமானதாகும். இவை மருத்துவம், வேளாண்மை மற்றும் கலை கல்லூரிகளில் சேரும் பொழுது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது உயர்கல்விகளில் மாணவர்களின் சேர்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் முழுமையான விசாரணை செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதன் அடிப்படையில் தேர்வு துறை முழுமையான விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகப் போகின்ற நிலையில் இந்த ஒரு குற்றச்சாட்டு வெளியாகி மாணவர்களையும் பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்!!
Next articleசற்றுமுன்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000!! வெளிவந்த புதிய அறிவிப்பு!!