உலகிலேயே விலை உயர்ந்த மாஸ்க் இஸ்ரேல் தயாரித்துள்ளது. மலைக்க வைக்கும் இதன் விலை

Photo of author

By Parthipan K

உலகிலேயே விலை உயர்ந்த மாஸ்க் இஸ்ரேல் தயாரித்துள்ளது. மலைக்க வைக்கும் இதன் விலை

Parthipan K

உலகிலேயே விலையுயர்ந்த முகக்கவசத்தினை இஸ்ரேல் நாட்டில் உள்ள ஆபரணம் தயாரிப்பு நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தடுக்க முகக் கவசம், சானிடைஸர், கையுறைகள் அத்தியாவசியமாக உள்ளது.

தற்போது முக கவசம் விதவிதமான வகைகளில் பல்வேறு விலைகளில் கிடைக்கிறது.

முக கவசம் இதனை ஆடை அணிந்து வருபவர்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கென இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பிரபல நகை விற்பனை செய்யும் நிறுவனமான யாவெல் காமெனி ஆபரணத்தினால் ஆன முககவசத்தினை செய்து அறிமுகப்படுத்தியுள்ளது.

இது 18 காரட் எடையுள்ள தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த முக கவசத்தில் சுமார் 3600 கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் உள்ள சிறிய கற்களை ஒட்டி நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அந்த நகை நிறுவனமானது, இதன் விலை 1.50 மில்லியன் டாலர்களாக(இந்திய மதிப்பில் 7 கோடி 35 லட்சம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.