உத்தரபிரதேச மாநிலத்தில் ஆன்லைனில் உதவித்தொகை பணம் வாங்கச் சென்ற இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் சுமார் 2000 பட்டியல் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அந்த பகுதியை சேர்ந்த சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனது ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் சான்றிதழை எடுத்துக்கொண்டு ஆன்லைனில் உதவித்தொகை பெறுவதற்காக நகரத்திற்கு சென்றுள்ளார்.
நகரத்திற்கு சென்ற இளம்பெண் 22 மணிநேரம் கழித்து, அந்தப்பெண்ணின் உடலானது கிராமப்புறத்தில் உள்ள வறண்ட குளத்திற்குள் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்தபோன அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றிய தந்தை மற்றும் அந்த கிராமப்பகுதி உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இறந்துபோன அந்த பெண்ணின் கழுத்துப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டு இருந்ததாகவும், அந்தப் பெண்ணின் இடது கால் விலங்குகளால் கடித்துக் குதறபட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர் கொண்டு சென்ற செல்போன், ஆதார் அட்டை மற்றும் அவரது மதிப்பெண் சான்றிதழ் அவரின் அருகிலேயே கிடந்ததையும் பார்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதன் பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தது முடிவில் தெரியவந்துள்ளதாகவும்,
இதற்கு காரணமான கொடூரக் கொலையாளிகளை கண்டு பிடிப்பதற்காக போலீசார் 3 குழுக்களை அமைத்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
அதே லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு முன்னர் தான் பட்டியல் சமூக பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து இதுபோன்ற பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றது.
மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்த மாநில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.