PMK: பாமக கட்சிக்குள் தொடர் மோதல் போக்கானது தலைமை பதவிக்காக இருந்து வருகிறது. அதிலும், அப்பா நான் தான் தலைவர் என்று ஒரு பக்கம் அறிக்கை வெளியிட்டும், மறுபக்கம் மகன் நான் தான் தலைவர் என கூறி வருகிறார். அதிலும் கட்சிக்குள்ளேயே இரு அணிகளாக பிரிந்து நிர்வாகிகளை நியமனமும் செய்கின்றனர். இதனால் யார் யார் முக்கிய பொறுப்புகளுக்கு தலைவர் என்பதிலேயே குழப்பம் எழுந்துள்ளது. இந்த மோதல் போக்கால் இவர்களின் கட்சி மதிப்பானது மாற்று கட்சியினரிடம் குறைந்து கொண்டே போகிறது.
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட தேவையான சீட்டுகளை இதனால் கேட்டுக் கூட வாங்க முடியாது. அதிலும், இவர்களுக்குள் நடக்கும் சண்டையை ஊடகம் வரை கொண்டு வந்ததே மிகப்பெரிய அவமதிப்பு. இந்த சண்டையானது முற்றுப்புளியின்றி செல்வதால் இரண்டு அணிகளாக பிரியக் கூடும் என கூறிவந்தனர். ஆனால் ராமதாஸ் மனைவி சரஸ்வதி, அன்புமணியை பார்ப்பதற்காக அவரது இல்லத்திற்கே சென்றுள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அன்புமணியிடம் கலந்துரையாடியுள்ளார்.
மற்றொரு பக்கம் அன்புமணி கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து கௌரவ தலைவர் ஜிகே மணி தற்போது திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் கைகோர்த்து பேசியுள்ளார். இது ரீதியாக ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். மகன் தாய் சந்திப்பெல்லாம் மிகவும் சாதாரணமான ஒன்று. மேற்கொண்டு ஜிகே மணி பேசியது குறித்து நான் கேட்டு சொல்கிறேன்.
மேலும் செய்தியாளர்கள், தொடர்ந்து பாமகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துக் கொண்டு இருப்பதாக கூறியதற்கு, அரசியல் கட்சி என்றாலே மோதல் போக்கு இருக்க தான் செய்யும். நாளடைவில் அது சரியாகிவிடும் எனக் கூறி, காத்திருப்போம் காத்திருப்போம் காலங்கள் வரும் என்று பாட்டு பாடியுள்ளார். இவரது மனைவி அன்புமணியை காண சென்றது சமாதானம் செய்ய தான் என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றனர்.