ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!!

Photo of author

By Divya

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!!

Divya

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!!

கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாகவும்,வசூல் மன்னனாகவும் வலம் வரும் நடிகர் ரஜினி காந்த்.தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றாலும் உலகளவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.இளம் வயது ரஜினிக்கு என்று இருந்த நடை,தனி ஸ்டைல் தற்பொழுது 72 வயது ஆன பின்பும் மாறாமல் இருக்கிறது.இதனால் தான் ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார்.

தற்பொழுது தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் ரஜினி ஆரம்பகாலத்தில் பல சவால்களை சந்திக்க நேரிட்டது.திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் ரஜினியின் சொந்த ஊரான பெங்களூரில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.கூலி தொழிலாளி,மூட்டை தூக்குவது என்று கிடைக்கின்ற வேலைகளை செய்து வந்த ரஜினிக்கு இறுதியாக பேருந்து நடத்துநர் பணி கிடைத்துள்ளது.

மேலும் அவ்வப்போது மேடை நாடகங்களில் நடித்து வந்த ரஜினியின் நடிப்பை வியந்து அவரது சிறு வயது தோழன் ‘ராஜ் பகதூர்’, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.நீ திரைத்துறையில் சாதனையாளராக வருவாய் என்று ரஜினிக்கு பண உதவியை செய்து “மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்” நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைத்தார்.

தொடர்ந்து 2 ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்ட ரஜினிக்கு ஒரு நாள் இயக்குநர் கே.பாலச்சந்தரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.ரஜினியின் துரு துரு பேச்சு,ஸ்டைல் பிடித்து போகவே கடந்த 1975 ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தில் நடிக்க வைத்தார்.இது தான் ரஜினியின் திரை வாழ்க்கையில் முதல் படமாகும்.இப்படத்தில் துணை வேடத்தில் நடித்த ரஜினி “பைரவி வீடு இது தானா? நான் பைரவியின் புருஷன்” என்று சொல்வது போன்ற வசனம் இடம் பெற்றிருக்கும்.

அதுவரை சிவாஜி ராவ் என்று சொல்லப்ட்ட இவரை இத்திரைப் படத்திற்கு பின்னர் ரஜினி என்று பெயர் மாற்றம் செய்து கே.பாலச்சந்தர் தமிழ் திரையுலகிற்கு அறிமுக படுத்தினார்.அதனை தொடர்ந்து தனது விடாமுயற்சியால் பல படங்களில் நடித்த ரஜினிக்கு குறுகிய காலத்திலேயே “சூப்பர் ஸ்டார்” பட்டம் கிடைத்து இன்று வரை கோலிவுட்டின் ராஜாவாக வலம் வருகிறார்.

ரஜினி சூப்பர் ஸ்டாராக கொண்டாட முக்கிய காரணமாக இருந்த அவரது உற்ற நண்பர் ராஜூ பகதூர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது
ரஜினிகாந்த்,தான் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியான நாளில் ஒரு திரையரங்கில் படம் பார்க்க சென்றோம்.அப்பொழுது ரஜினி திடீரென்று கண் கலங்கினார்.அவரிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு தான் நடித்த படம் பெரிய திரையில் வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார் என்று ராஜூ பகதூர் அளித்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.