கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! பச்சையப்பா கல்லூரி மாணவர்களின் திட்டம் போலீசார் எச்சரிக்கை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த ஜூலை 13ம் தேதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் 17ஆம் தேதி மாலையில் வன்முறையாக வெடித்தது. பள்ளியில் உள்ள பள்ளி பேருந்து அனைத்தையும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வகுப்பறையின் கண்ணாடிகள், மேசைகள் போன்றவை சுக்குநூறாக்கப்பட்டது.
மேலும் இந்த வன்முறையில் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் உடல் மாறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலை மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் வாட்ஸ் அப்பில் குழு அமைத்து கல்லூரி மாணவர்கள் போராட்டக்காரர்களை திரட்டுவதாகவும் வாட்ஸ் அப் தகவலால் அண்ணா நகர் கீழ்பாக்கம்பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் மாணவர்கள் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த எச்சரிக்கை மீறி யாரேனும் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.