Sports: பாகிஸ்தான் அணியை வீழ்த்த நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 152 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து மூன்றாவது போட்டியான இறுதி போட்டி இன்று பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டில் தொடங்கியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதற்கு முன் நடந்து முடிந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களான சஜித் கான் மற்றும் நோமன் அலி இருவரும் இரண்டு இன்னிங்சிலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினர் இந்த போட்டியிலும் அதே போல் அதிகமான ஓவர்களை வீசுவார்கள் இதனால் எங்கள் அணியிலும் சுழல் பந்து வீச்சாளர்களை வலுபடுதியுள்ளோம் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் , கஸ் அட்கின்சன், ரெஹான் அகமது, ஜாக் லீச், ஷோயப் பஷீர். இந்த அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்கியுள்ளது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் ஆறு தொடர்களுக்கு பின் தற்போது தொடரை வெல்லும் .