உயர் கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு! கல்லூரிகளில் தமிழ் பாடம் கட்டாயம்!
உயர் கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் சில நெறிமுறைகளையும் கூறியுள்ளார் அதில் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன் ,அன்னை தெரசா மகளிர் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பி.காம் ,பி.பி.ஏ மற்றும் பி.சி.ஏ பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் இடம்பெறவில்லை.
அதனால் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி நடைமுறையை பின்பற்றும் வகையில் மேற்கண்ட இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும்.
மேலும் இனி வரும் பருவத் தேர்வுகளில் தவறாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை அரசுக்கு உடனே அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தனர்.மேலும் இந்த புதிய உத்தரவை இனி வரும் பருவத் தேர்வுகளில் இருந்து அமல்படுத்த வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளனர்.