அரசு அலுவலங்களுக்கு வந்த அரசின் புதிய உத்தரவு!கட்டாயம் இனி இப்படிதான் வேலை செய்ய வேண்டும்

Photo of author

By Parthipan K

அரசு அலுவலங்களுக்கு வந்த அரசின் புதிய உத்தரவு!கட்டாயம் இனி இப்படிதான் வேலை செய்ய வேண்டும்

Parthipan K

Increased corona in Tamil Nadu! Restrictions in force again!

அரசு அலுவலங்களுக்கு வந்த அரசின் புதிய உத்தரவு!கட்டாயம் இனி இப்படிதான் வேலை செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோன வைரஸ்  கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் திருமணங்களில் மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று  20,227 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் 345 பேருக்கும் செங்கல்பட்டில் 126 பேருக்கும்  கோவையில் 55  பேர் உள்பட மொத்தம் 170 பேருக்கு கொரோன தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் இதுவரை கொரோன  தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,63,068 ஆக அதிகரித்துள்ளது. அதில் பெண்களின் எண்ணிக்கை 350ஆக உள்ளது. ஆண்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொதுத்துறை அரசு துணைச் செயலாளர்  எஸ்.அனு அறிக்கை ஒன்று  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  தமிழகத்தில்  உள்ள அனைத்து அரசு அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் என அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.