ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய போன்! விலை இவ்வளவு தானா !!

Photo of author

By Sakthi

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய போன்! விலை இவ்வளவு தானா
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தற்பொழுது பல வசதிகளை கொண்ட புதிய மொபைல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த மொபைலை மக்கள் குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தும் வகையில் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
பிரபல தெலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிராண்ட் தற்பொழுது ஜியோ பிரைமா 4 என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலில் வாட்ஸ் ஆப், யூடியூப் ஆகிய செயல்கள் ஏற்கனவே ஃபிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜியோ பிரைமா 4 மொபைல் 4ஜி எல்டிஇ கனக்டிவிட்டி வசதியை கண்டுள்ளது. மேலும் இந்த ஜியோ மொபைலில் 23 மொழிகளில் எந்த மொழியியல் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இந்த ஜியோ பிரைமா 4 மொபைல் 2.4 இன்ச் அளவுள்ள டி.எஃப்.டி 320*240 பிக்சல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.எம் கார்டெக்ஸ், ஏ53 புராசஸர், 512 எம்.பி ரேம் மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 1200க்கும் அதிகமான செயலிகளை  இந்த ஜியோ பிரைமா 4 மொபைலில் பயன்படுத்தலாம். இந்த ஜியோ பிரைமா 4 மொபைலில் கை எஸ் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் எப்.எம், சிங்கிள் சிம் ஸ்லாட், 3.5 எம்.எம் ஆடியோ ஜேக் ஆகிய வசதிகள் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஜியோ பிரைமா 4 மொபைலில் 1800 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோ பிரைமா 4 மொபைலில் கேமரா, எல்.இ.டி ஃபிளாஸ் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த ஜியோ பிரைமா 4 மொபைல் புளூ மற்றும் யெல்லோ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றது. இந்த ஜியோ பிரைமா 4 மொபைலை 2599 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம். ஜியோ மார்ட் இணையதளம் மூலமாக ஜியோ பிரைமா 4 மொபைலின் விற்பனை நடைபெற்று வருகின்றது.