சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா! 

0
49
#image_title
சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா!
ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் நேற்று(அக்டோபர்30) நடைபெற்ற போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நடப்பாண்டுக்கான ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் நவம்பர் மாதம் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த நிலையில் நேற்று(அக்டோபர்30) நடைபெற்ற போட்டியில் இந்தியா மகளிர் ஹாக்கி அணி சீனா மகளிர் அணியை எதிர்கொண்டது.
தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி இரண்டு கோல்களை அடித்தது. இறுதிவரை போராடிய சீனா மகளிர் அணி ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதையடுத்து இந்திய மகளிர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
நேற்று(அக்டோபர்30) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அடித்த இரண்டு கோல்களில் ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் தீபிகா அவர்கள் ஒரு கோலும், 26வது நிமிடத்தில் சலிமா டெடெ அவர்கள் ஒரு கோலும் அடித்தனர். சீனா அணிக்காக ஜியாகி ஜோங் அவர்கள் 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக நடப்பு ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் மூன்றாவது வெற்றியை பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதே போல நேற்று(அக்டோபர்30) நடைபெற்ற மேலும் இரண்டு போட்டிகளில் ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் மலேசியா மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சுனில் முடிந்தது. இந்திய அணி இன்று(அக்டோபர்31) நடைபெறும் போட்டியில் இந்தியா மகளிர் ஹாக்கி அணி ஜப்பான் மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.