PTK: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அடுத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் NDA கூட்டணி வெற்றி பெற்றால் கூட ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் தான் இருப்போம் என எடப்பாடி கூறினார். இந்த ஒப்பந்தம் பிடிக்காமல் புதிய தமிழகம் கட்சியானது அதிமுகவிலிருந்து வெளியேறியது. இவர்கள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்ற தகவலை தற்போது வரை வெளியிடவில்லை. அதற்கு முன்பு ஒரு சமிக்ஞையை காட்டியுள்ளது.
புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவ்வாறு அவர் கலந்து கொண்டு பேசியது, 2015 மற்றும் 16களில் வசதி படைத்தவர்களே டாக்டர் ஆனார்கள். நீட் தேர்வு மூலம் தற்போது ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் கூட மருத்துவம் படிக்க முடிகிறது. தேர்வு நேரத்தில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க மட்டுமே அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.
இதனை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். கடந்த நீட் தேர்வின் போது வினாத்தாள் கசிவு ஏற்பட்டு அது ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி நீட் தேர்வின் போது சோதனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு முறையான ஆதரவு கொடுக்க வேண்டும். ஏன் கர்நாடகாவில் கூட பிராமணனின் மாணவன் பூனல் எடுக்கப்பட்ட பிறகு தான் தேர்வு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள் தற்போது வரை செய்ய முடியவில்லை அதற்கு வேறொரு காரணம் உள்ளது. பட்டியலின சமூகத்தினரின் கல்வி வேலை உள்ளிட்டவர்களின் தரவுகளை கணக்கெடுப்பு நடத்தலாம் ஏன் நடத்தவில்லை என்று கேள்வியும் எழுப்பினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம் தற்போது அதிமுக பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. வரப்போகும் தேர்தலில் நாங்கள் யாரிடம் கூட்டணி வைப்போம் என்பதை மாநாடு முடிந்த பிறகு அறிவிப்போம்.
நாங்கள் வைக்கப் போகும் கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதாக தான் இருக்கும் என புள்ளி வைத்து முடித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றால் கட்டாயம் தமிழக வெற்றிக்கழகம் தான். ஆனால் இப்படி நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து விஜய் பக்கம் செல்வதென்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.