அதிமுக மற்றும் தவெக கூட்டணியை உறுதி செய்யப் போகும் ஈரோடு இடைத்தேர்தல்!!
TVK ADMK: ஈரோடு இடைத்தேர்தலில் தவெக விஜய் அதிமுக – விற்கு ஆதரவு அளிப்பாரா என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் அப்பா மகன் இறப்பிற்கு பிறகு ஈரோடு மாவட்டமானது மூன்றாவது இடைத்ததேர்தலை சந்திக்கிறது. அந்தவகையில் இதில் மும்முனை போட்டியா அல்லது நான்கு முனை போட்டியா என்ற பெரும் கேள்வி உள்ளது. ஆனால் தவெக தலைவர் விஜய் இடைத்தேர்தல் எதையும் சந்திக்கப்போவதில்லை என திட்டவட்டமாகவே தெரிவித்துவிட்டார். நமது இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என தெளிவாக உள்ளார்.
ஆனால் அதிமுக-விற்கு ஆதரவு கொடுப்பாரா என்ற பெரும் கேள்வி இருந்து வருகிறது. அரசியலில் நுழைந்ததிலிருந்து தங்களது அரசியல் எதிரியான திமுக மற்றும் பாஜக வை மாற்றி மாற்றி விமர்சனம் செய்து வந்தாரே தவிர இதர கட்சி ரீதியாக ஏதும் பேசியதில்லை. அதிமுக-வுடன் கூட்டணி பேச்சு அடிப்பட்ட போது தான் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இவ்வாறன பொய் தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.
தற்போது ஈரோடு இடைத்தேர்தல் வருவதையொட்டி ஏதேனும் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை ஏதுமில்லை. ஆனால் விஜய் இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தால் சரியான வியூகம் அமைக்க வேண்டும். ஏனென்றால் குறைவான வாக்குகள் வாங்கினால் கட்டாயம் அது வரப்போகும் சட்டமன்ற தேர்தலை பாதிக்கும், அதுவே அதிகப்படியான வாக்குகள் பெரும் பட்சத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பெரும் ஆதரவு கிடைப்பதோடு, ஆளும் மற்றும் எதிர் கட்சி என இருவருக்கும் பாதகமாக அமைந்து விடும்.
இதனையெல்லாம் விஜய் ஆலோசனை செய்து தான் இடைத்தேர்தலே வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். அதேசமயம் ஆதரவு அளிப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனை பொருத்திருந்து தான் பார்க்க முடியும்.