அடுத்த மாஸ் ஹீரோ எடப்பாடி தான்! செல்லூர் ராஜின் அதிரடி பேச்சு!

Photo of author

By Rupa

அடுத்த மாஸ் ஹீரோ எடப்பாடி தான்! செல்லூர் ராஜின் அதிரடி பேச்சு!

Rupa

The next Mass Hero is Edappadi! Cellur Raj's action speech!

அடுத்த மாஸ் ஹீரோ எடப்பாடி தான்! செல்லூர் ராஜின் அதிரடி பேச்சு!

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலானது அனைத்து தேர்தல்களை காட்டிலும் புதிய விதமாக நடைபெறும் தேர்தல் ஆகும்.ஏனென்றால் இரு பெரிய மூத்த தலைவர்கள் இன்றி நடக்கும் தேர்தல் இதுவே ஆகும்.அதனால் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கப்போகிறது என தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.அந்தவகையில் பல நூதன முறைகளில் தேர்தல் பரப்புரை நடந்து முடிந்துள்ளது.

அதில் அதிக படியாக பேசப்பட்டது ஆ.ராசா முதலமைச்சரை அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.அதனையடுத்து பல எதிர்ப்புகள் அவருக்கு எதிராக நடந்தது.அதற்கடுத்து பழனிசாமி அவர்கள் வருத்தப்பட்டதால் ஆ.ராசா மன்னிப்பு கேட்பதாக செய்தியாளர்களிடம் கூறினார்.அதன்பின் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு முடிவுவடைந்து வாக்கு எண்ணிக்கையாக தமிழகம் காத்துக்கொண்டிருக்கிறது.ஸ்ட்ராங் ரூம் எனப்படும் கட்டுப்பாடு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.வரும் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,அதிமுகவின் ஹீரோ எடப்பாடியார் தான் அவர் தான் டாப்.மற்றவர்கள் எல்லாம் டூப்.அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது.எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்றார்.