துருவ் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம்!! ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்!!

Photo of author

By CineDesk

துருவ் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம்!! ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்!!

இந்த வருடம் பொங்கல் அன்று விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். மேலும் அவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்க்ரீனில் ஹீரோவாக வந்தாலும் வில்லனாக வந்தாலும்  இவரை ரசிபதற்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் எளிமையான நடிப்பில் மயங்காத ஆளே இருக்க முடியது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இவரின் நடிப்பிற்கு அடிமை என்றும் சொல்லலாம். இந்நிலையில் தற்போது பல இடங்களில் இவரின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

மேலும் சீயன் விக்ரம்-ன் மகனான துருவ் விக்ரம் இவர் அர்ஜுன் ரெட்டி என்ற சூப்பர் ஹிட் தொலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் மூலம் பிரபலமானார். முதலில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற தலைப்பில் நடித்தார், பிறகு அந்த ரீமேக் செய்யப்பட்ட படகதை சரியாக இல்லாததால் இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில் அதித்ய வர்மா என்ற தலைப்பில் நடித்து 2019 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தினி மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை சொந்தமாக்கி கொண்டார்.

தந்தையை போலவே மகனும் பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாரிதுள்ளர். இதனிடையில் தற்போது விக்ரமின் 60வது படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ளதாக தவவல் வெளிவந்துள்ள நிலையில் தற்போது துருவ் விகரம் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் இணைந்து அடுத்த படம் நடிக்க உள்ளார்களா? என்ற கேள்ளிவியினை எழுப்பி எதிர்பாத்து வருகின்றனர்.