தல,தளபதி நடிக்கும் அடுத்த பான் இந்தியா மூவி! குத்து டான்ஸ் போடும் அவர்களது நெஞ்சங்கள்!

0
264

தல,தளபதி நடிக்கும் அடுத்த பான் இந்தியா மூவி! குத்து டான்ஸ் போடும் அவர்களது நெஞ்சங்கள்!

தமிழ்சினிமாவில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் ஒன்றாக நடிக்க இருந்த படங்கள் ஏராளம். முதன்முதலில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

அடுத்ததாக விஜய் அஜித் நடிக்க இருந்த நேருக்கு நேர் படம் பாதியில் அஜித் நடிக்க முடியாமல் போனது. பிறகு அஜித் கேரக்டரில் சூர்யா நடித்த படம் வெற்றி பெற்றது. அதேபோல் பூ, பிச்சைக்காரன் போன்ற எதார்த்தமான திரைப்படங்களை இயக்கியவர் சசி.

சசி இயக்கத்தில் அஜித் விஜய் நடிக்க இருந்த படம் தான் ரோஜா கூட்டம். இருவருக்கும் கால்ஷீட் பிரச்சனையால் அந்த படம் சின்ன நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் ஆகாஷ் ஆகிய இருவரின் நடிப்பிலும் வெளியானது.

அந்த இரண்டு பேருக்கும் அதுவரை பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் ரோஜா கூட்டம் படம் ஸ்ரீகாந்துக்கும் ஆகாஷ்க்கும் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு மீண்டும் அஜித் விஜய் இணைய வாய்ப்பில்லாமல் போனது துரதிஷ்ட வசமானது.

தற்போதுகூட விஜய்யும் அஜித்தும் ஒன்றாக இணைந்து நடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆர்வமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் அஜித் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார் கூறப்படுகிறது.

இந்தப்படம் பான் இந்தியா திரைப் படமாக இருக்கும் என்ற தகவலையும் அவர் கூறியிருப்பதாக தெரிகிறது. அப்படி ஒருவேளை இருவரும் இணைவது உறுதி ஆனால் இவர்களது ரசிகர்கள் இணையதளத்திலேயே ஆக்கிரமித்து விடுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதனிடையே வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் மங்காத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த மாதிரி படத்தை வெங்கட்பிரபு அல்லது சங்கர் ஆகியோரால் மட்டுமே சாத்தியமாக்க முடியும்.

தல அஜித் மற்றும் தளபதி விஜய் இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக அவர்களது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

Previous articleமூக்கை பயன்படுத்தி டயர்களுக்கு காற்று நிரப்பி சாதனை! கின்னஸ் ரெக்கார்டு படைத்த சேலத்து வாலிபர்!
Next articleநீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here