வந்துவிட்டது கொரோனாவின் அடுத்து திரிபு! ஒமைக்ரானை விட வேகமாக பரவுகிறதா?

Photo of author

By Vijay

கொரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தினம் 2 லட்சத்துக்கு அதிகமான தொற்று பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸின் அடுத்த மாறுபாடு மிகவும் வேகமாக பரவும் என குறிப்பிடுகிறது.

கொரோனாவின் ஒமைக்ரான் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட குறைவான ஆபத்தானது என்றாலும், இதுவரை இல்லாத வகையில் மிகவும் வேகமாக பரவும் தொற்று நோயாக கூறப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் covid-19 தொடர்பான ஆய்வு பிரிவின் தொழில்நுட்ப தலைவரான, மரியான் வான் கெர்கோவ் சமூக ஊடக சேனல்களில் ஒரு நேரடி விவாதத்தில் தெரிவித்துள்ளார். சுகாதார அமைப்பு, கடந்த வாரம் மட்டும் சுமார் 20 மில்லியன் தொற்று பாதிப்புகளை பதிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.

வேகமாக பரவும் ஒமைக்ரான் மாறுபாட்டின் வாராந்திர தொடர் பாதிப்புகள், புதிய உலகளாவிய சாதனையை படைத்துள்ளன. முந்தைய அனைத்து வகைகளிலும்; இது ஆபத்தானது அல்ல என்றும், அவை வந்தவுடன் மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது என்றும் கூறினார்.

மேலும் கொரோனாவின் அடுத்த மாறுபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று கூறுகிறார். அதன் தொற்று பரவல் மிக அதிகமாக இருக்கும்.