வலிமை படத்தின் அடுத்த அப்டேட் வந்தாச்சு!! டீசர் எப்ப ரிலீஸ் ஆகும்னு தெரியனுமா??

Photo of author

By CineDesk

வலிமை படத்தின் அடுத்த அப்டேட் வந்தாச்சு!! டீசர் எப்ப ரிலீஸ் ஆகும்னு தெரியனுமா??

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் நடிக்கும் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து சில வருடங்களே ஆன நிலையில் அந்த படத்தை பற்றிய எந்த ஒரு தகவலையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தது படக்குழு. இந்த நிலையில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரசிகர்கள் முதல்வர் முதல் விளையாட்டு வீரர்கள் வரை அனைவரிடமும் இந்த படத்தை பற்றிய அப்டேட்களை வெளியிடுமாறு கேட்டனர். இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பார்வை கடந்த மே மாதம் 1 ஆம் தேதி நடிகர் அஜித் அவர்களின் பிறந்த நாளன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து கொரோன தொற்று  மக்களிடையே அதி தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக அந்த முதல் பார்வை தேதி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். பின்னர் பல போராட்டத்திற்கு பிறகு வலிமை படத்தின் முதல் பார்வை தேதி கடந்த ஜூலை 11-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. இந்த முறை ரசிகர்களை எந்தவித ஏமாற்றத்திலும் விடாமல் படக்குழு கூறியபடியே 11 ஆம் தேதி படத்தின் முதல் பார்வை போஸ்டரை  வெளியிட்டது. மேலும் இத்தனை வருடங்களாக காத்திருந்ததில் எந்த ஒரு குற்றமும் இல்லை என்று சொல்லும் அளவில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மெர்சல் ஆக இருந்தது.

இதை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் படம் வரும் ஆயுத பூஜைக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த படத்தின் மேலும் சில அப்டேட்களை வாரமொரு முறை வெளியிட உள்ளதாக பட குழு கூறியிருந்தது.  இதை தொடர்ந்து  படத்தின் டீசர் எப்பொழுது வெளியாகும் எனவும் கூறியுள்ளது. அது வலிமை படத்தின் டீசர் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என கூறியுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என வெளியிட வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் படக்குழு வெளியிடவில்லை.