அடுத்த தொடங்க இருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கால அவகாசத்தை வழங்குமா உச்சநீதிமன்றம்!
தற்பொழுது ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது இது இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி பறக்கும் படையினர் அமைத்து கண்காணிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.அதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
அந்த விசாரணையில் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து உள்ளாட்சி தேர்தல்களும் நடத்திவிட வேண்டும் என்று கூறினார்.ஆனால் தற்போது நடக்காமல் இருந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமே நடைபெற உள்ளது. அதனை அடுத்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு போதுமான சூழல் இல்லை என்பதால் 7 மாத கால அவகாசத்தை வழங்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.இந்த வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.
அதில் நீதிபதி கூறியதாவது,தேர்தல் ஆணையம் கேட்ட கால அவகாசம் வழங்க முடியாது.தேர்தல் ஆணையத்தினால் சட்டமன்ற தேர்தல் ,நாடாளுமன்றத் தேர்தல், அரசியல் கட்சிகள் கூட்டங்கள் போன்றவற்றையெல்லாம் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை மட்டும் உங்களால் பின்பற்ற முடிகிறது.உள்ளாட்சித் தேர்தலை மட்டும் நடத்த முடியாதா என்ற கூறினார்.குறிப்பாக மனுதாரர் சங்கர் என்பவர் தான் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அவர் சார்பாக வேண்டுமானால் உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.அதனடிப்படையில் மனுதாரர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டுள்ளனர். அவர் கேட்ட பிரமாண பத்திரத்தில் கூறியதாவது, மொத்தமாக 528 பஞ்சாயத்துக்கள் இருந்தது. தற்பொழுது அதன் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அவற்றுக்கும் மேலாக நகர்ப்புற பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
அதுமட்டுமின்றி மாநகராட்சிகளும் நகராட்சிகளும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.அதனால் அதிக அளவு நகர்ப்புற பஞ்சாயத்துகள் உருவாகியுள்ளது.அந்த காரணத்தினால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு ,தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம் வழங்குவதில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என மனுதாரர் சங்கர் கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியதால் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம் வழங்க வாய்ப்புகள் உள்ளது.அதாவது தமிழகத்தின் அடுத்த ஐந்து மாதங்களில் மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் முழுமையாக நடைபெறும் எனக் கூறுகின்றனர்.