அமெரிக்காவில் 6 கோடியை கடந்த நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

அமெரிக்காவில் 6 கோடியை கடந்த நோய் தொற்று பாதிப்பு!

Sakthi

உலகளாவிய நோய்த்தொற்று பரவல் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் பிரேசில் நாடும், இருக்கின்றன. இதுவரையில் உலக அளவில் 30.36 கோடிக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 54.96 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியை கடந்து இருக்கிறது. இதுகுறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 லட்சத்து 48 ஆயிரத்து 502 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து இருக்கிறது அமெரிக்கா இதன் மூலமாக அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்சமயம் 6 கோடியே 4 லட்சத்து 63 ஆயிரத்து 746 ஆக அதிகரித்திருக்கிறது. நோய்க்கு ஒரே நாளில் 2025 பேர் பலியாகி இருப்பதால் அங்கே நோய் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 58 ஆயிரத்து 346 ஆக அதிகரித்திருக்கிறது.

அமெரிக்காவில் இதுவரையில் நோய் தொற்றிலிருந்து 4 கோடியே 21 லட்சத்து 71ஆயிரத்து 880 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தற்சமயம் 1 கோடியே 74 லட்சத்து 33 ஆயிரத்து 521 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.