உலக அளவில் 30.50 கோடியை நெருங்கியது கொரோனா தொற்று!

0
80

தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. என்ற புதிய வகை நோய் தொற்று பரவும் நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. புதிய வகை நோய் தொற்று பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசுகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன.

இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 30.37 கோடியை கடந்து இருக்கிறது. இதனடிப்படையில் உலகம் முழுவதும் தற்சமயம் 30 கோடியே 37 லட்சத்து 83 ஆயிரத்து 56 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் தொற்றின் இருந்து இதுவரை 25 கோடியே 82 லட்சத்து 35 ஆயிரத்து 948 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். அதோடு வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 94 ஆயிரத்து 48 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்த நோய்த்தொற்று தாக்குதலுக்கு தற்சமயம் 4 கோடியே 48 ஆயிரத்து 60 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுபவர்களின் 93 ஆயிரத்து 197 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

இந்த நோய்த்தொற்று பாதித்த நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன.