நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை! ஒரே நாளில் 2000 ஐ கடந்தது
டெல்லி :
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் தொற்றின் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளது வருத்தத்தை தருகிறது.
கொரோனா தொற்று கடந்த 2019 ஆண்டு ஆரம்பித்து இந்தியாவை பெறும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதனை தடுக்க பல்வேறு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது. தொற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
டெல்லியில் சமீப காலமாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து 1000 யை கடந்து வந்த நிலையில் தற்போது நேற்று ஒரு நாள் தொற்றின் எண்ணிக்கை 2151 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11000 ஐ கடந்தது.
நாடு தழுவிய தடுப்பூசி சட்டத்தின் கீழ் இதுவரை 220.65 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் 95.20 கோடி இரண்டாம் நிலைத் தடுப்பூசியாகவும் 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களாகவும் போடப்பட்டிருக்கின்றன.
கடந்த ஒரு நாள் மட்டும் 11,336 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கடந்த ஒரு நாளைக்கு மட்டும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1222 ஆகவும் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,66,925 ஆகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,42,497 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.