நாகப்பட்டினம் மாவட்ட நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடியார்! மகிழ்ச்சியில் மக்கள்!

0
122

தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகி இருக்கின்றது. அதனை இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பித்து வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றது முதல் பல மக்கள் நலத் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகின்றார். இந்த நிலையில், நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டின் மாவட்டங்களில் பிரிக்கும் வகையில், மாவட்டங்கள் உடைய எண்ணிக்கையை அதிகரித்து வருகின்ற பரப்பளவு மற்றும் மக்கள் தொகையில், அதிகமாக இருக்கின்ற மாவட்டங்களில் இரு பிரிவுகளாக பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில், சென்ற வருடம் நவம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவானது. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், மற்றும் ராணிப்பேட்டை என்ற புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவானது. இவ்வாறு கூடுதலாக 5 மாவட்டங்கள் உருவானது அந்த மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மிக நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிய மாவட்டம் மயிலாடுதுறை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான அறிவிப்பு சென்ற மார்ச் மாதம் வெளியானது. ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் , மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவெடுத்து இருக்கின்றது. இதனால் தமிழ்நாட்டின் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்திருக்கிறது. இதன் மூலமாக மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருக்கின்றது. இதன் காரணமாக அந்த மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள் அவர்கள் தரப்பிலிருந்து முதல்வருக்கு நன்றி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

Previous articleதேர்தலுக்காக வன்னியர் வாக்குகளை பெற திமுக போட்ட மாஸ்டர் பிளான்! கலக்கத்தில் பாமக
Next articleதமிழக அரசியலில் தேர்தலுக்கு பின் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்! சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தொடங்கிய பாஜக!