இந்த மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைவு! ஊரடங்கு அகற்றப்படும் நிலை!
கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பாதித்து வருகிறது.மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும்,விழிப்புணர்வுடனும் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரின் பாதுகாப்பு கருதி தொற்று அதிகமுள்ள இடங்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.கொரோனாவின் 2 வது அலை தற்போது நமது நாட்டில் அதிகப்படியான மக்களை சூரையாண்டு விட்டது.
தற்போது பல கட்டுப்பாடுகளை விதித்ததால் மக்களும் விழிப்புணர்வுடன் இருப்பதால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்படுகிறது.தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தற்போது தொற்று வரத்து குறைந்து காணப்படுகிறது.அந்தவகையில் மகராஷ்டிரா,டெல்லி போன்றவற்றில் தொற்று குறந்து வருகிறது என்று கூறுகின்றனர்.ஓர் மாதம் முன் டெல்லி முழுவதும் இடுகாடகவே காட்சி அளித்தது.அதேபோல மகரஷ்டிராவும் அவ்வாறு காணப்பட்டது.
அதனால் அம்மாநில அரசுகள் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கடும் நடவடிக்கைகளை அமல்படுத்தினர் மக்களை அதை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினர். நேற்று லால் அவர்கள் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை நேரில் சந்தித்தார்.அப்போது இந்தியாவில் எந்த அளவிற்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது என மத்திய சுகாதரத்துறை இணைச்செயலாளர் லால் அகர்வால் கூறியதாவது,நமது நாட்டில் அதிகப்படியானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இருப்பினும் மக்கள் தொகையில் 2 சதவீதம் மக்களுக்கு மட்டுமே தொற்றை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
மொத்த மக்கள் தொகையில் 1.8 சதவீதம் மக்களே இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 15 நாட்களாக கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறந்து வருகிறது.கடந்த 13-ம் தேதியன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 17.13 ஆக இருந்தது.தற்போது 13.3 ஆக குறைந்துள்ளது.அதுமட்டுமின்றி 22 மாநிலங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு 15 சதவீதம் அதிகமாக உள்ளது.
மராட்டியம்,உத்திரபிரதேசம்,டெல்லி,பீகார்,மத்திய பிரதேசம்,சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு தற்போது குறைந்து காணப்படுகிறது.கடந்த 2 வாரங்களில் மட்டும் 199 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து காணப்படுகிறது என அவர் கூறினார்.தொற்றின் பாதிப்பு குறைந்து காணப்படுவதால் அம்மாநிலத்தில் மட்டும் ஊரடங்கு தகர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.