15 நாட்களுக்கு முன்பே அண்ணாமலை காதை எட்டிய அந்த ஆபாச ஆடியோ! முன்னாள் திமுக உறுப்பினர் என்பதால் நடவடிக்கை இல்லை?

0
202
The obscene audio that reached the ears of Annamalai 15 days ago! No action because former DMK member?
The obscene audio that reached the ears of Annamalai 15 days ago! No action because former DMK member?

15 நாட்களுக்கு முன்பே அண்ணாமலை காதை எட்டிய அந்த ஆபாச ஆடியோ! முன்னாள் திமுக உறுப்பினர் என்பதால் நடவடிக்கை இல்லை?

பாஜக கட்சியில் நேற்று முதல் பரபரப்பாக ஓர் ஆபாச ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவானது சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணுக்கும் ஓபிசி அணியின் பொதுச் செயலாளராக இருக்கும் சூர்யா சிவா இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் தற்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. திமுக கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தவர் தான் சூர்யா சிவா.

இவர் பாஜகவில் இணைந்த உடன் சிறுபான்மை கட்சி அணி தலைவராக நியமிக்கப்படுவார் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் பதவி டெய்சி சரணுக்கு வழங்கினர். இதனால் இருவரும் எலியும் பூனையுமாக மோதிக்கொண்டே இருந்தனர். இதன் உச்சகட்டமாக சூரிய சிவா, டெய்லி சரணை ஆபாச வார்த்தைகளால் தீட்டி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.இந்த ஆடியோவானது நேற்று வைரலானது. இந்த ஆடியோ வைரலானதை அடுத்து இந்த விவகாரம் குறித்து ஏழு நாட்களுக்குள் தமிழக பாஜக மாநில துணை தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

அதேபோல இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை சூர்யா சிவா எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள கூடாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து டெய்சி சரண் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், சூர்யா சிவா இவ்வாறு பேசியது அண்ணாமலை அவர்களுக்கு முன்கூட்டியே தெரியும்.இவர் பேசியது குறித்து நான் அவரிடம் தான் முதலில் புகார் அளித்தேன். அப்போதே அண்ணாமலை இருவரையும் அழைத்து விசாரணை செய்தார்.

ஆனால் மேற்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருவேளை சூரிய சிவா திமுகவிலிருந்து வந்ததால் இவ்வாறு நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறார்களோ என்று தெரியவில்லை. மேலும் பாஜக பெண் நிர்வாகிக்கு இவ்வாறான நிலை என்றால் மற்ற பெண்களுக்கு எண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இதர கட்சிகள் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. 15 நாட்களுக்கு முன்பே இந்த பிரச்சனை அண்ணாமலைக்கு தெரிகிறது என்றால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் கண்டும் காணாமல் இருந்திருக்கிறார் என்ற பல கேள்விகளை சரமாரியாக எழுப்பி வருகின்றனர்.

Previous articleடிடிவி தினகரன் உடன் கூட்டணி அமைக்கிறதா பாஜக? அண்ணாமலை சொன்ன அதிரடி பதில்!
Next articleFIFA: சவூதி அரேபியா வெற்றி! அர்ஜென்டினா அணி கேப்டன் வருத்தம்!