பூதகராமாக வெடிக்கும் ஓசி பஸ் விவகாரம்!! மற்றொரு இடத்தில் நடத்துனரை சுற்றிவளைத்த பெண்கள்!! வைராலகும் காட்சி!
அமைச்சர் பொன்முடி அவர்கள் பொதுக்கூட்டத்தில் பெண்களைப் பார்த்து நீங்கள்ஓஸிபஸ்ஸில் தானே செய்கிறீர்கள் என்று கேட்டார். இவ்வாறு இவர் கேட்டதற்கு பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு கோவையில் அரசு பேருந்து ஏறிய மூதாட்டி ஒருவர் நடத்துனரிடம் நான் ஒன்றும் ஓசி பஸ்ஸில் செல்லவில்லை. பணத்தை வாங்கிட்டு டிக்கெட் கொடு என்று வாதாடினார். இந்த வீடியோ தற்பொழுது வரை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அசிங்கப்பட்ட #திராவிடமாடல் #ஒசிபஸ்_வேண்டாம்_போடா pic.twitter.com/12UvyWq1fU
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) October 1, 2022
அதேபோல இன்னொரு இடத்தில் சில பெண்கள் அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். அவ்வாறு ஏறியவர்கள் நடத்துனரிடம் நாங்கள் எல்லாம் ஓசி பஸ்ஸில் செல்லவில்லை. இந்த பணத்தை வாங்கிட்டு டிக்கெட் கொடு,எங்களுக்கெல்லாம் ஓஸி வேண்டாம்… என்று விவாதம் செய்துள்ளனர். இலவசம், இலவசம் என்று சொல்கிறீர்கள் எத்தனை இலவசம் கொடுத்து விட்டீர்கள் என்றும் அந்த பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர். நடத்துனர் அந்த பெண்களை சமாளிக்க முடியாமல் சென்று விட்டார். இந்த வீடியோ பதிவு தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.