காவாலா பாட்டுக்கு தன்னை மறந்து ஆடிய முதியவர்… இணையத்தில் வீடியோ வைரல்… 

Photo of author

By Sakthi

 

காவாலா பாட்டுக்கு தன்னை மறந்து ஆடிய முதியவர்… இணையத்தில் வீடியோ வைரல்…

 

ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா பாடலுக்கு முதியவர் ஒருவர் திரையங்கில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்தத்தில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி தற்பொழுது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்கில் முதியவர் ஒருவர் காவாலா பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

 

ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து முதல் பாடலாக வெளியாகிய காவாலா இன்று முதல் வைரலாகி வருகின்றது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை காவாலா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து பிரபலம் அடைந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா பாடல் திரையரங்கில் ஓடும் பொழுது தன்னை மறந்து எழுந்து நின்று நடனம் ஆடியுள்ளார். இதை அங்கு உள்ள சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இதையடுத்து முதியவர் காவாலா பாடலுக்கு திரையரங்கில் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

 

வீடியோவில் வந்த திரையரங்கம் பெயர் என்ன, அது எங்கு உள்ளது, முதியவர் யார் என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் முதியவர் நடனமாடும் இந்த வீடியோவை பார்த்தால் ஆரம்பத்தில் இருந்தே காவாலா பாடலுக்கு ஆவலுடன் காத்திருந்தார் என்பது மற்றும் புரிந்தது.