ரேவனா சிட்டப்பா என்பவர் கர்நாடகாவில் கனகபுரம் சாலையில் உள்ள சரக்கு சிக்னல் அருகே தனது செடிகளை 10 முதல் 30 ரூபாய்க்கு கடும் வெயிலில் ஒரு குடையுடன் விற்று வந்துள்ளார்.
இதனைக் கண்ட ஐ.எம்.சுபம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செயல் குறித்து பதிவிட்டுள்ளார்.நேற்று பகிரப்பட்ட இந்த புகைப்படத்தை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டனர் .அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
https://twitter.com/shubham_jain999/status/1320619850423660545?s=20
இந்த புகைப்படத்தை அஸ்வினி எம் ஸ்ரீதர் என்பவர் 10:45 க்கு பகிர்ந்துள்ளார் .இந்த கண்ட சமூக ஆர்வலர்கள், அனைவரும் இணைந்து அவருக்கு குடை, மேஜை மற்றும் நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
https://twitter.com/_kanakapuraroad/status/1320706077617393664?s=20
இந்த புகைப்படம் மாலை 6.07-க்கு பகிரப்பட்டது. இதற்கு பல தரப்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
இதேபோன்று டெல்லியில் யூடியூபே ஒருவர் சாலையோர கடைகளில் பொருட்கள் விற்க முடியாமல் தவித்து வரும் முதியவர் ஒருவருக்கு உதவி செய்யும் வகையில், வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பின்பு சில நாட்களுக்கு பின் அவருக்கு பலர் தரப்பிலிருந்து உதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.