Cinema : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா சூப்பரான பாடகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்துக்கு ஃபேன் பாலோவர்ஸ் உலகெங்கும் உள்ளனர். தற்போதைய 74 வயதிலும் தன்னை பிசியாக வைத்துக்கொண்டு பல படங்களில் நடித்து வருகிறார்.
இவரின் கூலி திரைப்படமானது இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து ஜெயிலர் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்த ஷெடுலை நகர்த்தி வருகிறார். இவர் 1981 ஆம் ஆண்டு லதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ரஜினியை பேட்டி எடுப்பதற்காக வந்த லதா மீது காதல் வயப்பட்டு பின்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இப்படி இருக்கையில் ரஜினிக்கு ஜோடியாகவே இவரது மனைவி ஒரு படத்தில் நடித்துள்ளாராம். இதுதான் முதலும் மற்றும் கடைசி படம் என்று கூறுகின்றனர். அக்னி சாட்சி என்ற படமானது 1982 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியானது. இதில் அன்றைய டாப் ஹீரோ ஹீரோயினிகளான சிவக்குமார் சரிதா இடம்பெற்றிருந்தனர். குறிப்பாக இதில் ரஜினி ஒரு கேமியோ ரோலில் வரவே அவருக்கு ஜோடியாக லதா ஒரு சீனில் மட்டும் நடித்திருப்பாராம். இது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவர்கள் நடித்த போஸ்டரானது இணையத்தில் வைரலாகி வருகிறது.