திரையுலக மாமேதையுடன் நடிக்கும் வாய்ப்பு பறிப்பு! இன்று உலகம் போற்றும் நடிகன்!

0
272
#image_title

1977 ஆம் ஆண்டு அப்பொழுதுதான் இந்த புதுமுக நடிகர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். எந்த படத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அப்பொழுது உள்ள புதுமுக நடிகர்களுக்கு இருந்த ஒரு குழப்பம் தான்.

 

அப்பொழுதுதான் மாபெரும் வாய்ப்பு அவர் கதவை தட்டியது என்று சொல்லலாம். தான் திரையில் பார்த்து மிகவும் ரசித்து கைதட்டி உலகமே போற்றக்கூடிய திரை உலக மாமேதை என்று சொல்லக்கூடிய ராஜ்குமார் அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு.

 

டாக்டர்.ராஜ்குமார் என்கிற மாமேதையோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் யார் தான் வேண்டாமென்பார்கள்.

 

கிரிகன்யே , ஒரு கன்னட படம். இந்த படத்தில் ராஜ்குமார் அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அந்த புதுமுக நடிகருக்கு கிடைத்துள்ளது. முதல் நாள் சூட்டிங் வரை அவருக்கு தூக்கமே இல்லையாம். அனைவரிடமும் நான் ராஜ்குமார் அவர்களுடன் நடிக்கப் போகிறேன் என்று சொல்லி சொல்லி குதித்துக் கொண்டிருந்தாராம் அந்த புதுமுக நடிகர்.

 

முதல் நாள் ஷூட்டிங்கில் ராஜ்குமார் அவர்களை நேரில் அதுவும் மிகவும் பக்கத்தில் பார்த்த அந்த புதுமுக நடிகருக்கு கை கால்கள் எதுவும் ஓடவில்லை. அப்படியே அவரை ரசித்து நின்று விட்டாராம். அப்பொழுது மனதுக்குள் இது எனக்கு கடவுள் தந்த வரம் என்று நினைத்துக் கொண்டு நடிக்க தயாராகி கொண்டிருந்த சமயம் அது.

 

உடனே தயாரிப்பு நிறுவனத்துடன் இருந்து ஒரு செய்தி வெளியாகிறது. அதைக் கேட்ட புதுமுக நடிகர் மிகவும் அதிர்ச்சி அடைந்து விடுகிறார்.

 

இந்த படத்தில் நீங்கள் இல்லை. இந்த ரோலில் தூகுதீபா சீனிவாஸ் என்கிற நடிகர் தான் நடிக்கப்போகிறார் என்கிற செய்தி காதில் விழுந்ததும் தொங்கிய முகத்தோடு செட்டை விட்டு வெளியே நடக்க தொடங்கியுள்ளார்.

 

எதிர்பார்த்த நடிகர் ராஜ்குமார் அவர்கள் அந்த புதுமுக நடிகரை அழைத்தார். இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என வருந்தாதீர்கள் நிச்சயமாக பட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்று சிறு குங்குமத்தை அவர் நெத்தியில் வைக்கிறார்.

 

வாய்ப்பு பறிபோனதற்காக மிகவும் வருந்தாதீர்கள். நல்ல பெரிய வாய்ப்புகள் வரும். நீங்கள் வருங்காலத்தில் மாபெரும் நடிகனாக வருவீர்கள். நான் கூட உங்களிடம் கால் சீட் வாங்குவோம் அளவிற்கு வரப் போகிறதோ என்னவோ ? எனவே இதை எல்லாம் நினைத்து வருந்தாதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்.

 

ராஜ்குமார் ஆசிகளோடு வெளியேறிய அந்த நடிகர் அப்படித்தான் இந்தியா முழுக்க அல்ல உலகம் முழுவதும் ரசிக்கும் நடிகனாக வளர்ந்தார். வேறு யாருமல்ல. ரஜினிகாந்த் என்கிற சூப்பர் ஸ்டார் தான் அவர்.

Previous articleஅபச்சாரம்! இப்படி எல்லாமா எழுதினார் கண்ணதாசன்! சென்சாரில் நீக்கப்பட்ட வரிகள்!
Next article9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை! விண்ணப்பம் செய்வது எப்படி?