மதுபான கடை வேண்டும்.. களத்தில் இறங்கி போராடிய பெண்கள்!!

0
150
The opposite news in Dharmapuri! Women's protest for a liquor store!!
The opposite news in Dharmapuri! Women's protest for a liquor store!!

 

தமிழ்நாட்டில் சுமார் நாலாயிரத்து எண்ணூற்று இருபத்து ஒன்பது மதுபானக் கடைக்கள் இயக்கமடைந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் சராசரியாக நூற்று ஐம்பது கோடி ரூபாய் என்ற ரீதியில் ஒரு ஆண்டில் ரூபாய் நாற்பத்து ஐந்தாயிரம் கோடி மதிப்பிலான வருமானத்தைத் தருவது குறிப்பிடத் தக்கது.

வழக்கமாக டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி நடந்துவரும் போராட்டங்களுக்கு மத்தியில் தற்போது புதியதாக தங்கள் பகுதியில் புதியதாக ஒரு மதுபானக் கடையை அமைக்க நடந்துள்ள போராட்டம் ஆச்சரியத்திற்கு உரியது. அதுவும் பெண்களே இப்போரட்டத்தினை நடத்தியிருப்பது மேலும் விசித்திரமாக உள்ளது.

தருமபுரியில் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக மதுபானக் கடை திறக்கவேண்டும் என்ற கோரியுள்ளார்கள். அவர்களது பகுதியில் மதுபானக்கடை இல்லாத காரணத்தினால் இருபது கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டும் என்றும் மேலும் தாங்கள் உழைத்துப் பெற்ற சம்பளமானது சட்டவிரோதமாக வாங்கப்படும் மதுவினால் கரைந்து விடுவதாகவும் ஆகையால் பலஞ்சர அள்ளி, நலப்பரம், கெட்டூர், பட்டி, ஆதனூர், வண்ணாத்திப்பட்டி, நல்லாம்பட்டி போன்ற ஏழு கிராமங்களைச் சேர்ந்த தருமபுரி பகுதி மக்கள் புதிதாக மதுபானக் கடை அமைக்கப்பட வேண்டும் என்று மனு விடுத்துள்ளனர்.

ஆகஸ்டு பதினைந்தாம் நாள் சுதந்திரதினத்தினைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படவிருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே இருப்புகள் மது அருந்துபவர்கள் பெறுவதாகத் தெரியவருகிறது.

கள்ளச்சாராயம் அருந்துவதால் உயிரிழப்புகள் சில நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது மாற்று விதமான போதைப் பொருட்களைத் தேடிச் செல்லாதவாறு மது பானக் கடை தங்கள் பகுதியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

Previous articleஇறந்த பிறகும் கூட பிணத்துடன் உடலுறவு.. டாப் 5 ஹீரோயின்களுக்கு நடந்த கொடூரம்!!
Next articleஇனி இத்தனை நாட்களுக்கு தான் பள்ளி செயல்படும்!! விடுமுறை குறித்து மாஸ் அறிவிப்பு!!