ஒத்தைக்கு ஒத்தை வரியா என்ற பாணியில் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எதிர்க்கட்சி தலைவர்! நான் ரெடி.. உங்க தலைவர் ரெடியா?
முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் அவர் தொகுதிக்கு பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்தார். அப்பொழுது அங்கிருந்த நிரூபர்களிடம் பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது மு க ஸ்டாலின் கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தமிழகத்தையே உருக்குலைத்து விட்டதாக கூறி வருகிறார். ஆனால் அது முற்றிலும் பொய்யான தகவல். அதேபோல திமுக ஆட்சி வந்த உடன் தமிழகம் பாதாளத்தில் இருந்ததாகவும்,அதனை மீட்டெடுத்ததாகவும் சட்ட ஒழுங்கை சீர்படுத்தி அமைதியான முறையில் தற்பொழுது தமிழகம் உள்ளதாகவும் தெரிவித்து வருகிறார்.
ஆனால் அவர் கூற்றுக்கு மாறாக தற்பொழுது தமிழகம் போதை மாநிலமாக தான் உள்ளது. இரண்டு நாட்களில் மட்டும் 12 கொலைகள் சரமாரியாக நடக்கிறது. குறிப்பாக இந்த ஆட்சியில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 2,138 நபர்கள் போதை பொருளை விற்று வருவதாக சோதனை மேற்கொண்டு கண்டுபிடித்தனர். ஆனால் இதில் 148 பேர் மட்டுமே கைது செய்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை.
சில தினங்களுக்கு முன்பு இராமநாதபுரத்தில் 360 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தப்பட்டது. இதனின் பின்னணியில் இருப்பது திமுகவை சேர்ந்த நிர்வாகி தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்பொழுது வரை இது குறித்து எந்த ஒரு ஆக் ஷனும் எடுக்கவில்லை. நேற்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகம் தற்பொழுது வளர்ந்து வருவதை பார்த்து பலரும் வயிறு எரிவதாக கூறினார். ஆனால் அதில் சில திருத்தம் உள்ளது, யாருடைய வயிறும் எரியவில்லை மக்கள் வயிறு தான் தற்பொழுது விலைவாசி உயர்வால் எரிகிறது.
அந்த அளவிற்கு தமிழகம் சீர்கெட்ட நிலையில் சென்றடைந்து வருகிறது. தற்பொழுது ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வராக தான் உள்ளார். குறிப்பாக ஸ்டாலின், எதிர்க்கட்சியை பழிவாங்குவதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சி கூறும் கருத்துகளுக்கு செவி சாய்த்து நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல அதிமுக ஆட்சியில் செயல்பட்டு வந்த திட்டங்கள் பலவற்றை தற்பொழுது திமுக முடக்கியுள்ளது. இவ்வாறு திட்டங்களை முடக்கியது தான் திமுகவின் சாதனையா.
அதுமட்டுமின்றி 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோது எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். அதனை பட்டியலிட்டு பொதுவெளியில் அதனைப் பற்றி விவாதிக்க நான் தயாராக உள்ளேன். அதேபோல முதல்வர் ஸ்டாலினும் ஆட்சி அமைத்தது முதல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க தயாரா என்று கேள்வி எழுப்பி இதற்கு மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.