பிரதமரை பேச கூறி எதிர்க்கட்சிகள் அமளி!! மீண்டும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!!

பிரதமரை பேச கூறி எதிர்க்கட்சிகள் அமளி!! மீண்டும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!!

ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரப்பட்டது.

மணிப்பூர் விவகாரத்தை எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.கள். கருப்பு நிற உடை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏற்கனவே இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் கள நிலவரத்தை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய் “இந்தியா” கூட்டணி மணிப்பூர் சனிக்கிழமை சென்றது. மேலும் பாதுகாப்பு முகாமில் தங்கவைத்துள்ள மக்களை சந்தித்து அறுதல் கூறினார்கள்.

அதனையடுத்து இந்தியா கூட்டணியில் திமுக வை சென்ற எம்.பி. கனி மொழியும் மணிப்பூர் முகாமில் தங்கிருந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் எதிர்கட்சிகள் பல்வேறு பகுதிகளில் குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தி பின்னர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று எம்.பி.க்கள் மனு அளித்தார்கள்.

இந்த நிலையில் மீண்டும் டெல்லி திரும்பிய குழு நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள காங்கிராஸ் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி தலைவர் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவரிடம் மணிப்பூர் நிலவரம் குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்படட்டது. இந்த நிலையில் மக்களவை  கேள்வி நேரம் வழக்கம் போல் செயல் படும் என்று சபாநாயர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து 9  வது நாளாக எதிர்க்கட்சிகள் பிரதமரை பேச கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரையும், மாநிலங்களவை பகல் 12 மணி வரையும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.