உயர் கல்வித் துறை வெளியிட்ட உத்தரவு! பொறியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு!
உயர் கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் விதிமுறைகளை மீறிய 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. மேலும் விடைத்தால் மதிப்பீடு, முறையாக கணக்கு சமர்ப்பிக்காத புகாரில் தேர்வு முடிவுகள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 18 கல்லூரி மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட உயர் கல்வித் துறை அமைச்சர் கா பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில் விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்களை அனுப்ப மறுத்து ஒத்துழைப்பு அளிக்காதது முன்னதாகவே நான்கு பருவ தேர்வுகளுக்கான அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முன் பணத்துக்கு சரியாக கணக்கு தராதது ஆகிய காரணங்களால் 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் ஆனது அண்ணா பல்கலைக்கழகத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது மாணவர்களின் நலன் கருதி நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என அமைச்சர் கா பொன்முடி உத்தரவிட்டார். அதன்படி 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கல்லூரிகள் செய்த தவறுக்கு அந்தந்த கல்லூரிகளில் மீது அண்ணா பல்கலைக்கழகத்தால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.