ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை செயலாளர் வெளியிட்ட உத்தரவு! இதனை மீறினால் கடும் நடவடிக்கை!
கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000, பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது.இந்த பொங்கல் பரிசனை பெற ரேஷன் ஊழியர் சார்பில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.அந்த டோக்கனில் குறிப்பிட்டிருந்த நேரம் மற்றும் நாளன்று மக்கள் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று பொங்கல் பரிசினை பெற்று கொண்டனர்.
பொங்கல் பரிசை பெறாதவாரர்களுக்கு கடந்த ஜனவரி 14 ஆம் தேதி ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்பட்டது.அந்த வேலை நாளை ஈடு செய்யும் விதமாக கடந்த 16 ஆம் தேதி விடுமுறை அளிக்கபட்டது.இந்நிலையில் ரேஷன் ஊழியர்கள் முன்னதாகவே அறிவித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இது குறித்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அந்த சுற்றறிக்கையில் விதியை மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.