மத்திய அரசு போட்ட ஆர்டர்!! இனி ரேஷன் கடைகளில் பாமாயில் கிடையாது??

Photo of author

By Rupa

 

 

சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு தற்பொழுது 20% வரை அதிகரித்துள்ள நிலையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் என இரண்டு வகையான திட்டங்கள் மூலமாக தமிழக மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் ஆகிய பொருட்கள் குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகளில் போதுமான ஸ்டாக் இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளான நிலையில் படிப்படியாக தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து ரேஷன் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நீக்கியது.  தற்பொழுது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக சரியாக பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் 90 சதவீதம் ரேஷன் கடைகளில் இருந்த பொருட்கள் தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில் மீதம் 10 சதவீதம் கடைகளில் மட்டுமே இன்னும் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வருகின்றது. இந்நிலையில் அந்த பத்து சதவீதம் தடையும் விரைவில் சரி. செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு எண்ணெய்களுக்கான விலை உயர்வு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மத்திய அரசு தற்பொழுது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியையும் சோயா, சூரியகாந்தி எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியையும் 0 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதைப் போலவே சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாமாயில், பீன், சூரிய காந்தி எண்ணெய்களின் இறக்குமதி வரியானது 12.5 சதவீதத்தில் இருந்து 32.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் மீதான பயனுள்ள வரிகள் 5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாகவும் 13.75 சதவீதம் முதல் 35.75 சதவீதமாகவும் அதிகரிக்கும். இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களின் விலையும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு லேபிள் மட்டும் ஒட்டி விற்பனை செய்யப்படும் எண்ணெய்களின் விலையும் அதிகரிக்கவுள்ளது.

எண்ணெய் விலை உயர்வால் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் எண்ணெய் விலை அதிகரித்தால் ஸ்வீட், கார வகைகள் போன்ற உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.