ஊராட்சித் தலைவரை தேசியக் கொடி ஏற்ற விடாமல் செய்த ஊராட்சி மன்ற செயலாளருக்கு தக்க தண்டனை கிடைத்தது

Photo of author

By Parthipan K

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆத்துப் பாக்கம் பகுதியில் கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவர் அமிர்தம். நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் நின்று வெற்றி பெற்றார்.

அண்மையில் நடந்த சுதந்திர தின விழாவில் அந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்ற விடாமல் செய்தனர். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர் என்பதால் இந்த செயல் நடந்துள்ளது.

இதுகுறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கினை எடுத்துக்கொண்டது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

“அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம ஊராட்சி செயலாளரின் பதவியை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் இனிமேல் நடக்காது” எனவும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து ஊராட்சி தலைவர் அமிர்தம் அம்மாவை பேட்டி எடுக்கச் சென்ற செய்தியாளரும் தாக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.