ADMK: செங்கோட்டையன் அதிமுகவின் ஆரம்ப கட்ட காலத்திலிருந்து அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் சமீப காலமாக எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் ஒத்துவரவில்லை. எடப்பாடிக்கு நடத்திய பாராட்டு விழாவில் இவருக்கு பெரும்பாரியான மரியாதையானது விழா அழைப்பிதழில் கூட கிடைக்கவில்லை. இதனால் கோவமடைந்த செங்கோட்டையன் தொடர்ந்து எடப்பாடியை சாடி பேசி வந்தார். இவர்களது இந்த பணி போரானது சட்டசபை வரை நீடித்தது.
இறுதியில் சபாநாயகருக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒன்று சேர்ந்தனர். ஆனால் இவர் தலைமையையும் தாண்டி டெல்லிக்கு சென்று அமித்ஷா உள்ளிட்டவர்களை சந்தித்து வந்தது தற்போது அதிமுகவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் திமுகவும் இவரை எங்கள் பக்கம் வந்து விடுங்கள் என்று தூது அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இதனையெல்லாம் தவிர்த்து விட்டு தனக்கென்று தனி ஆலோசனை வைத்து ஓபிஎஸ் உடன் இணைய திட்டமிட்டு வந்தார்.
மேற்கொண்டு ஓபிஎஸ் போட்ட வழக்கும் நிலுவையில் உள்ளதால், அவருக்கு சாதகமாகும் பட்சத்தில் அவருடன் கை கோர்த்தால் கட்டாயம் அதிமுகவை இந்த பக்கம் இழுத்து விடலாம் என்று எண்ணியுள்ளார். இதனையெல்லாம் அறிந்து பொறுமையாக இருந்த எடப்பாடி, இவர் டெல்லிக்கு தனியாக சென்று மத்திய மந்திரியை சந்தித்து வந்தது அரவே பிடிக்கவில்லை. இதனால் அவரை கட்சியை விட்டு நீக்கம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரீதியாக அக்கட்சியின் நிர்வாகியே கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்சமயம் அதிமுகவுடன் ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டோரை இணைக்க வேண்டுமென்பதில் குறியுடன் உள்ளதால் , இனி இவர் நமக்கு செட் ஆக மாட்டார் என்று எடப்பாடி முடிவெடுத்துள்ளாராம்.