மீண்டும் தொடரும் கனமழையால் மாநில மக்கள் அவதி!! வானிலை மையம் புதிய அறிவிப்பு!!
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளத்காக தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி இன்று அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை , வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமாலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
மேலும் மேற்கு திரை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதனையடுத்து ஜூலை12 முதல் 13 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை வாய்ப்புதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.