வெள்ளத்திற்கு மொத்த கிராமத்தை பறிகொடுத்த மக்கள்!! நிவாரண மையத்தில் கிராம மக்கள் தஞ்சம்!!

Photo of author

By Jeevitha

வெள்ளத்திற்கு மொத்த கிராமத்தை பறிகொடுத்த மக்கள்!! நிவாரண மையத்தில் கிராம மக்கள் தஞ்சம்!!

வட மாநிலங்களில் பருவ மழை தொடங்கிய நாட்கள் முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக சில மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது  மற்றும் பல கிராமங்கள் நீரில் முழ்கியது. மேலும் வட மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் மக்களை பாதுக்காப்பான பகுதியில் தங்க வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஹிமாசலப் பிரதேசத்தில் சிம்லா, ஸ்பிதி பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித் தீர்த்தது. அதனை தொடர்ந்து சனிக்கிழமை ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்தது.

மேலும் பேரிடார் மீட்பு குழுவினர் கிராம மக்களை பாதுக்காப்பான இடத்தில் தங்க வைத்து வருகிறார்கள். மேலும் பல கோடி செலவு செய்து விவசாயம் செய்த விளைநிலங்கள் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் தொடர் கனமழை காரணமாக சில பகுதியில் வீடு சேதமடைந்துள்ளது. அதனையடுத்து சில இடங்களில் மணி சரிவு ஏற்பட்டுள்ளது.

அதனை  தொடர்ந்து ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிதி பகுதியில் அருகிலுள்ள கொலாக்சா கிராமத்தை மொத்தமாக வெள்ளம் அடித்து சென்று விட்டது. மேலும் 60 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த கிராம மக்கள் மிகுத்த வேதனை அடைத்துள்ளார்கள். அதனையடுத்து அந்த கிராம மக்களுக்கு அரசு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.