தாய்க்கு ஆக்சிஜன் கேட்ட நபர்!ஆக்சிஜன் கேட்ட இனி அறை தான்! அமைச்சரின் சரமாரியான பேச்சு!
கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது அந்தவகையில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பானது மகாராஷ்டிரம்,டெல்லி,குஜராத்,மராட்டி,புதுச்சேரி,தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளது.குறிப்பாக டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறையும்,படுக்கை வசதி பற்றாக்குறையும் உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கூறியிருந்தார்.அதுமட்டுமின்றி டெல்லிக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும் இதர மாநிலங்களுக்கு கிடைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் பிரஹலாத் படேல் என்பவர் தனது சொந்த தொகுதியான மத்திய பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ஒருவர் தனது தாய்க்கு ஆக்சிஜன் தருமாறு ஆவேசமாக அமைச்சரிடம் கேட்டார்.அதற்கு அமைச்சர் நீ இவ்வாறு பேசினால் உனக்கு இரண்டு அறை கிடைக்கும் என கூறினார்.அதன்பின் ஆக்சிஜன் கேட்ட நபர்,அடி வாங்க தயார் என பதிலளித்தார்.மேலும் அவர் தாயாருக்கு வழங்கிய ஆக்சிஜன் சிலிண்டர் 2 மணி நேரம் மட்டுமே நீடித்ததாக கூறினார்.
அந்த நாபர் தாயின் பாசத்தில்,அந்த மருத்துவமனையில் சரியாக கவனிக்காத காரணத்தினால்,ஆவேசத்தில் அவ்வாறு அமைச்சரிடம் பேசினாலும்,அமைச்சர் அவ்வாறு கூறியிருக்க கூடாது யான பலர் பேசுகின்றனர்.அமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது.அமைச்சர் அதன்பின் கூறியதாவது,அந்த நபருக்கு யாரும் உதவி செய்ய மறுக்கவில்லை,ஆனால் அந்த நபர் ஒழுங்காக பேசியிருக்க வேண்டும் என கூறி மழுப்பினார்.கொரோனா காலக்கட்டத்தில் ஆக்சிஜன்,படுக்கைகள் கிடைக்காதது நடந்த வண்ணம் தான் உள்ளது.ஆனால் அரசாங்கம் மக்களின் தேவையை நிரைவேற்றும் பொறுப்பில் உள்ளதால்,மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாவிடில் மக்கள் கோவமடைய தான் செய்வார்கள்.அதனால் மக்களுக்கு இவ்வாறு பதிலளிப்பதை அரசாங்கம் கண்டிக்க வேண்டும்.