சசிகலாவின் விடுதலை! பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

Photo of author

By Sakthi

நெல்லை மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று பேனர்கள் வைத்த அதிமுகவின் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட கால சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று விடுதலை செய்யப்படுவார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது .அதனைத் தொடர்ந்து அவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை முதற்கொண்டு அனைத்தையும் செலுத்திவிட்டார் . இதற்கிடையில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் சசிகலாவிற்கு கொரோனா இருப்பது உறுதியானது.

அதன் காரணமாக, சசிகலா தனிமைப்படுத்தப்பட்டார் அதன் பிறகு கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் சசிகலாவின் உடல் நிலையானது தொடர்ச்சியாக சீராக இருந்து வருவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டது.

இந்த நிலையில், இன்றைய தினம் நான்கு வருட கால சிறை தண்டனை முடிவுற்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் சசிகலா. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர், கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் அதிமுக நிர்வாகி ஒருவர் சசிகலாவை வரவேற்று பேனர் வைத்திருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணியன் ராஜா பேனர் வைத்த விவகாரம் அதிமுக தலைமைக் கழகத்திற்கு தெரியவர, சுப்பிரமணிய ராஜாவை அதிமுக தலைமைக்கழகம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்திருக்கிறது. நீக்கம் செய்வதற்கான உத்தரவை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிறப்பித்து இருக்கிறார்கள்.