தன்னை தவறாக பேசியவர்களுக்கு மைக் செட் மூலம் பதிலடி கொடுத்த நபர்!! 

Photo of author

By Rupa

தன்னை தவறாக பேசியவர்களுக்கு மைக் செட் மூலம் பதிலடி கொடுத்த நபர்!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் பகுதியை சார்ந்த ஜாண் ரவி .இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டை கட்ட துவங்கியது முதலே ,டீக்கடையில் இருந்து வெட்டிப் பேச்சு பேசும் சில நபர்கள் ஜான் ரவி பற்றி அவதூறு பரப்ப தொடங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் மனவேதனையில் பொறுமை இழந்தார் ஜான். வாடகைக்கு மைக் செட் எடுத்தார். மைக் மூலம் டீக்கடை அருகே சென்று தன்னை அவதூறாக பேசியவர்களுக்கு தாறுமாறாக பேசி தக்க பதிலடி கொடுத்தார்.

ஜான் ரவியின் பதிலடி கொடுக்கும் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து – பொது இடத்தில் தகாத வார்த்தைகள் பேசியதாக இவர் மீது காயங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துடன் மைக் செட்டையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து ஜான் ரவி கூறுகையில் தன் மீது வழக்கு பதிந்தாலும், தான் தற்போது நிம்மதியாக இருப்பதாகவும் அவதூறு பரப்பியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.