விமானத்தின் டயர் பகுதியில் 11 மணிநேரம் பயணித்த நபர்; உயிர் தப்பிய அதிசயம்!

Photo of author

By Vijay

விமானத்தில் முறையாக பயணம் செய்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், விமானத்தின் டயர் பகுதியில் மிகச்சிறிய இடத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது அரிதாக நடந்துள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.

விமான நிலையத்தின் கடுமையான கண்காணிப்பிற்கு இடையிலும், பலர் துணிந்து விமானத்தின் அடிப்பாகத்தில் ஒளிந்து கொள்கின்றனர். இதுகுறித்து விமான ஊழியர்கள், முதலில் எகிறி குதித்து விமானத்தின் டயர் மீது ஏறிவிட்டால், அதன் பின் டயர் மடங்கும் பகுதியில் சுலபமாக ஒளிந்து கொள்ளலாம் என கூறுகின்றனர்.

ஆனால்,அவ்வாறு பயணிப்பது மிகவும் அரிதாகும். அவ்வாறு டயர் பகுதியில் ஒளிந்து கொள்பவர்கள், டயர் எப்போது உள்ளிழுக்கும் அல்லது வெளியேறும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனை கண்காணிக்காமல் இருந்தால் டயரில் சிக்கியோ அல்லது கீழே தள்ளப்பட்டோ உயிரிழக்க நேரிடும்.

மேலும் ,ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் போது அங்கு மிகவும் குளிரான தட்ப நிலை இருக்கும். அதனால் அங்கே நீண்ட நேரம் தாக்குபிடிப்பது மிகவும் கடினமாகும்.

அந்த வகையில், ஒரு நபர் 11 மணி நேரம் சரக்கு விமானத்தின் டயர் பகுதியில் மறைந்திருந்து பயணித்ததாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்துக்கு சென்ற சரக்கு விமானத்தின் டயர் பிரிவில் பதுங்கிக் கொண்டு பயணித்து அதிசயமாக உயிர் தப்பினார்.

விமானம், ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து புறப்பட்ட தொடக்கத்தில் அந்த நபர் சக்கரப் பிரிவில் ஒளிந்து கொண்டார் என ஷிபோல் விமான நிலையத்தில் செய்தி தொடர்பாளர் மற்றும் காவல்துறையினர் கூறினர்.